காலாவதியாவதால் ஆபத்தாகும் மருந்துகளை கழிவறையில் வீசி நீர் ஊற்றி அழியுங்கள்

புதுடில்லி: 'காலாவதியான அல்லது பயன்படுத்தப்படாமல் இருக்கும் 17 வகையான மருந்துகளை குப்பை தொட்டியில் வீசுவது, பிற உயிர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்' என எச்சரித்துள்ள சி.டி.எஸ்.சி.ஓ., அவற்றை கழிப் பறையில் வீசி தண்ணீர் ஊற்றி அப்புறப்படுத்தும்படி அறிவுறுத்தி உள்ளது.
பொதுவாக நாம் வாங்கும் மருந்துகளில் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டு இருக்கும்.
மருந்து அட்டையில் மேல்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த தேதிக்கு பின், அந்த மருந்தை பயன்படுத்தினால் பல்வேறு பக்கவிளைவுகளை உண்டாக்கும். சில சமயங்களில் உயிருக்கு ஆபத்தும் ஏற்படக்கூடும்.
அந்த வகையில், 17 மருந்துகளின் பட்டியலை சி.டி.எஸ்.சி.ஓ., எனப்படும் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ளது.
பெரும்பாலும் வலிநிவாரணி, பதற்றம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு பயன்படுத்தப்படும், 'டிரமடால், டேபென்டாடோல், டயாஸிபாம், ஆக்ஸிகோடோன், பென்டானில்' போன்ற மருந்துகள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
இந்த, 17 வகையான மருந்துகள் காலாவதியான பின் அல்லது பயன்படுத்தப்படாத நிலையில் அவற்றை முறையாக அப்புறப்படுத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களை, சி.டி.எஸ்.சி.ஓ., வெளியிட்டுள்ளது.
அதன் விபரம்:
காலாவதியான அல்லது பயன்படுத்தப்படாத இந்த, 17 வகை மருந்துகளை குப்பை தொட்டியில் வீசும்போது, அவை குப்பை அள்ளும் தொழிலாளர்கள் அல்லது குழந்தைகள் கைகளில் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
@twitter@https://x.com/dinamalarweb/status/1942809570973474846twitter
மேலும், கால்நடைகள் மற்றும் சாலையில் சுற்றித்திரியும் விலங்குகளின் வயிற்றுக்குள் அந்த மருந்து செல்ல வாய்ப்பு அதிகம்.
அதோடு அந்த மருந்துகள் மறுவிற்பனைக்காக மீண்டும் கள்ளச்சந்தைகளுக்கு வரக்கூடிய அபாயமும் உள்ளன.
எனவே இந்த மருந்துகளை குப்பை தொட்டியில் வீசுவதை தவிர்த்து, அவற்றை உடைக்காமல் கழிப்பறைக்குள் வீசி தண்ணீர் ஊற்றி அப்புறப்படுத்துவது அவசியம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



மேலும்
-
விநாயகர் சதுர்த்தி நாளில் கச்சத்தீவில் கொடியேற்றுவோம்: அர்ஜூன் சம்பத்
-
பவன் கல்யாண் வியூக வகுப்பாளர் அ.தி.மு.க.,வுக்கு வியூகம் வகுப்பு
-
‛‛கல்லுக்குள் ஈரம்'' நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு
-
ராமதாஸ் - அன்புமணி இணைந்து செயல்பட கோரி 5 பேர் தீக்குளிக்க முயற்சி
-
செம்மங்குப்பம் ரயில் விபத்து: தமிழகத்தைச் சேர்ந்தவர் கேட் கீப்பராக நியமனம்
-
நடுவானில் இண்டிகோ விமானத்தில் மோதிய பறவை: பாட்னாவில் அவசர தரையிறக்கம்