'ஆப்லைன் பேமென்ட் சேவை கவனம் தேவை'

புதுடில்லி:நிதி ஒருங்கிணைப்பை விரிவுபடுத்த, ஆப்லைன் எனப்படும் இணைய வசதி தேவைப்படாத பேமென்ட் சேவைகளை மேம்படுத்துவதில் 'பின்டெக்' எனும் நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் கவனம் செலுத்த, மத்திய நிதித்துறை செயலர் நாகராஜு வலியுறுத்தி உள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
சர்வதேச அளவில், பொருளாதார வளர்ச்சியிலும், ஏழ்மை ஒழிப்பிலும், நிதி ஒருங்கிணைப்பு ஒரு முக்கிய கருவியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் 17 நிலையான வளர்ச்சி இலக்குகளில், ஏழு இலக்குகள், நிதி ஒருங்கிணைப்புடன் நேரடியாக தொடர்புஉடையவை.
வங்கி கட்டமைப்புக்குள் கொண்டு வரப்படாதவர்களுக்கும், வங்கி சேவைகள் குறைவாக உள்ள இடங்களுக்கும் நிதி சேவைகளை விரிவுபடுத்துவதற்கான முக்கியத்துவத்தை இது உணர்த்துகிறது.
எனவே நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆப்லைன் பேமென்ட் சேவைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.
மேலும்
-
தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பில்லை:கோவையில் தி.மு.க., அரசை வறுத்தெடுத்த இ.பி.எஸ்.,
-
அ.தி.மு.க., ஆட்சியில் மனம் குளிர செய்வோம்! தொழில்துறையினருக்கு இ.பி.எஸ்., உறுதி
-
ஆர்.சி.பி.,யின் அழுத்தமே 11 பேர் உயிரிழப்புக்கு காரணம்; கோலிக்காக அவசரமாக விழா நடத்தியதும் அம்பலம்
-
ஜனாதிபதியை விமர்சித்த கார்கேவை விளாசிய பா.ஜ.,
-
காலாவதியாவதால் ஆபத்தாகும் மருந்துகளை கழிவறையில் வீசி நீர் ஊற்றி அழியுங்கள்
-
மதமாற்ற கும்பலின் மூளையாக செயல்பட்டவர் உ.பி.,யில் கைது