ஏற்றுமதியாளர் வரி தள்ளுபடி அவகாசம் நீட்டிக்க கோரிக்கை

திருப்பூர்:ஏற்றுமதி தொழில் நலன் கருதி, மத்திய - மாநில அரசு வரிகள் மற்றும் வரி தள்ளுபடி திட்டத்தை, 2029ம் ஆண்டு வரை நீட்டிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜவுளி ஏற்றுமதியாளர்கள் பயன்பெறும் வகையில், மத்திய - மாநில வரிகள் மற்றும் வரி தள்ளுபடி திட்டம், 2019ல் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக, ஏற்றுமதியாளர்கள் கூடுதலாக செலுத்திய வரிகளை, திரும்பப் பெறும் வாய்ப்பு உருவாக்கப்பட்டது.
ஜவுளி உற்பத்தியாளர்கள், மூலப்பொருள் கொள்முதல் துவங்கி, பல்வேறு சேவைகளைப் பெற, தனித்தனியே வரி செலுத்துகின்றனர். உள்நாட்டில் பொருட்களை விற்பனை செய்யும் போது, தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வரியைக் காட்டிலும் கூடுதலாகப் பெற்ற வரியினங்களை திரும்பப் பெற உற்பத்தியாளர்களுக்கு வழி உள்ளது.
ஆனால், ஏற்றுமதியாளர்கள் அவ்வாறு பெற இயலாது. அதற்காகவே, மத்திய - மாநில வரிகள் மற்றும் வரி தள்ளுபடி திட்டம் அறிவிக்கப்பட்டு, கூடுதலாக செலுத்திய வரி திரும்ப வழங்கப்படுகிறது.
இத்திட்டம், வரும் 2026 மார்ச் 31ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. ஏற்றுமதியாளர் நலன் கருதி, இத்திட்டத்தை, மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டுமென, மத்திய அரசுக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும்
-
ஆர்.சி.பி.,யின் அழுத்தமே 11 பேர் உயிரிழப்புக்கு காரணம்; கோலிக்காக அவசரமாக விழா நடத்தியதும் அம்பலம்
-
ஜனாதிபதியை விமர்சித்த கார்கேவை விளாசிய பா.ஜ.,
-
காலாவதியாவதால் ஆபத்தாகும் மருந்துகளை கழிவறையில் வீசி நீர் ஊற்றி அழியுங்கள்
-
மதமாற்ற கும்பலின் மூளையாக செயல்பட்டவர் உ.பி.,யில் கைது
-
டில்லியில் நவம்பர் 1 முதல் பழைய வாகனத்திற்கு மீண்டும் தடை
-
விமானத்தை மொய்த்த தேனீக்கள்