களைகட்டும் இந்திய கப்பல் துறை சைப்ரஸ் ரூ.10,000 கோடி முதலீடு

புதுடில்லி:இந்திய கப்பல் துறையில் இதுவரை இல்லாத அளவுக்கு, 10,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக, சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்திய கப்பல் துறையில் 100 சதவீத அன்னிய முதலீட்டுக்கு, நடப்பாண்டில் மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதையடுத்து சைப்ரசை தளமாகக் கொண்ட, இன்டோரியன்ட் நேவிகேசன் மற்றும் டான்ஷிப் அண்டு பார்ட்னர்ஸ் ஆகிய நிறுவனங்கள் 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டை அறிவித்துள்ளன. இந்திய கப்பல் துறையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அன்னிய நேரடி முதலீடு இதுவாகும்.

இதன்கீழ் உள்ள அனைத்து கப்பல்களும் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் பதிவு செய்யப்படும். முக்கியமாக தேசிய கப்பல் போக்குவரத்தில் இவை சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, கடந்த மாதம் 15ம் தேதி சைப்ரஸ் நாட்டுக்கு சென்று, அந்நாட்டு அதிபர் நிகோஸ் கிறிஸ்டோ டவுலிட்ஸுடன் இருதரப்பு வர்த்தக பேச்சு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement