கஞ்சா கடத்திய 2 பேர் கைது
பூந்தமல்லி, பூந்தமல்லியில் உள்ள வெளியூர் பேருந்து நிலையத்தில், பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அங்கு, சந்தேகிக்கும் வகையில் திரிந்த இருவரை பிடித்து, அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டதில், 22 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விஸ்வநாதன், 23, ஹேமந்த் பாபு, 22, ஆகிய இவர்கள், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, பூந்தமல்லி சுற்று வட்டாரத்தில் விற்றதும் தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜனாதிபதியை விமர்சித்த கார்கேவை விளாசிய பா.ஜ.,
-
காலாவதியாவதால் ஆபத்தாகும் மருந்துகளை கழிவறையில் வீசி நீர் ஊற்றி அழியுங்கள்
-
மதமாற்ற கும்பலின் மூளையாக செயல்பட்டவர் உ.பி.,யில் கைது
-
டில்லியில் நவம்பர் 1 முதல் பழைய வாகனத்திற்கு மீண்டும் தடை
-
விமானத்தை மொய்த்த தேனீக்கள்
-
53 சதவீத 6ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே 10ம் வாய்ப்பாடு தெரிகிறது!
Advertisement
Advertisement