நேபாளம்-சீனா எல்லையில் வெள்ளத்தில் 35 பேர் மாயம்

காத்மாண்டு: நேபாளம் மற்றும் சீனாவின் எல்லையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில், இரு நாட்டிலும், 35 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
நம் அண்டை நாடான சீனாவில் பலத்த மழை பெய்து வருகிறது.
நேபாளத்தை ஒட்டியுள்ள சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் ஜிகாசே மாகாணத்தின் கிராங்க் துறைமுகம் அருகே, கட்டுமானப் பணி நடந்தது. அப்போது அங்கு திடீரென
நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில், 17 பேர் மாயமானதாக கூறப்படுகிறது. இதில், 11 பேர் சீன எல்லைக்குள்ளும், ஆறு பேர், நேபாள எல்லையிலும் மாயமானதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, சீனா மற்றும் நேபாளத்தை இணைக்கும், மைத்ரி எனப்படும் நட்பு பாலம்,
மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போதகோஷி நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில், இந்த பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதில், ஆறு சீனர்கள் உட்பட, 18 பேர் அடித்துச் செல்லப்பட்டதாக, நேபாள அரசு கூறியுள்ளது.
மேலும்
-
தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பில்லை:கோவையில் தி.மு.க., அரசை வறுத்தெடுத்த இ.பி.எஸ்.,
-
அ.தி.மு.க., ஆட்சியில் மனம் குளிர செய்வோம்! தொழில்துறையினருக்கு இ.பி.எஸ்., உறுதி
-
ஆர்.சி.பி.,யின் அழுத்தமே 11 பேர் உயிரிழப்புக்கு காரணம்; கோலிக்காக அவசரமாக விழா நடத்தியதும் அம்பலம்
-
ஜனாதிபதியை விமர்சித்த கார்கேவை விளாசிய பா.ஜ.,
-
காலாவதியாவதால் ஆபத்தாகும் மருந்துகளை கழிவறையில் வீசி நீர் ஊற்றி அழியுங்கள்
-
மதமாற்ற கும்பலின் மூளையாக செயல்பட்டவர் உ.பி.,யில் கைது