ஜவுளித்துறையில் 'பிரியதர்ஷினி' கே.கே.நகரில் ஷோரூம் திறப்பு பட்டுப்புடவைக்கு தங்கம் இலவசம்

சென்னை, கே.கே.நகரில் 'பிரியதர்ஷினி சில்க்ஸ்' புது ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது.

கே.கே.நகர் பி.வி.ராஜமன்னார் சாலையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த ஷோரூம் திறப்பு விழாவில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர்ஏ.எம்.விக்கிரமராஜா, எஸ்.என்.ஜெ., குழும நிறுவனங்களின் தலைவர் எஸ்.என்.ஜெயமுருகன், ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமி உள்ளிட்டோர் பங்கேற்று விற்பனையை துவக்கி வைத்தனர்.

மேலும், விருகம்பாக்கம் எம்.எல்.ஏ., ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, சென்னை மாநகராட்சி கணக்கு நிலைக்குழு தலைவர் க.தனசேகரன், 'கல்யாணமாலை' டி.வி.மோகன், கவுன்சிலர் கே.கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவிற்கு வந்தவர்களை பிரியதர்ஷினி நிறுவனர் எம்.ஜி.சுரேஷ்குமார், எம்.ஜி.எஸ்.பிரியதர்ஷினி மற்றும் எம்.ஜி.எஸ்.சூர்யகுமார் ஆகியோர் வரவேற்றனர். பிரியதர்ஷினி சில்க்ஸ் திறப்பு விழாவையொட்டி பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

இது குறித்து நிர்வாகிகள் கூறியதாவது:

நாட்டிலேயே முதல் முறையாக பட்டுப் புடவை வாங்கினால், தங்கம் இலவசமாக வழங்கப்படுகிறது. இதர ஆடைகள் வாங்குவோருக்கு வெள்ளி வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள், குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே.

பிரியதர்ஷினி சில்க் ஷோரூமில், விதவிதமான டிசைன்களில் 8,000 முதல் 2 லட்சம் ரூபாய் வரை உள்ள, காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள் உள்ளிட்ட அனைத்து வகையான பட்டுப் புடவைகள் கிடைக்கின்றன. ஆடைகளுக்கு ஏற்ற வெள்ளி நகைகளும் கிடைக்கின்றன.

மேலும் ஒரு ரூபாய்க்கு பட்டுப்புடவை வாங்கலாம். மீதியை சுலப தவணையில் செலுத்தலாம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement