ரயிலில் புதுச்சேரி மதுபாட்டில் கடத்திய இருவர் சிக்கினர்

மதுராந்தகம்,:புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் பயணியர் விரைவு ரயிலில், மதுபாட்டில்கள் கடத்திய இருவரை, மதுராந்தகம் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.

பாண்டிச்சேரியில் இருந்து சென்னை செல்லும் பயணியர் விரைவு ரயிலில் மதுபானம் கடத்தப்படுவதாக, மதுராந்தகம் மதுவிலக்கு போலீசாருக்கு, நேற்று தகவல் கிடைத்துள்ளது.

தகவலின்படி, மதுவிலக்கு காவல் ஆய்வாளர் மங்களபிரியா தலைமையிலான போலீசார், மாலை 6:00 மணியளவில், மதுராந்தகம் ரயில் நிலையத்திற்கு வந்த, பாண்டிச்சேரி ரயிலில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த விழுப்புரம் மாவட்டம், மலையரசன் குப்பத்தைச் சேர்ந்த வள்ளி, 47, சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்,50, ஆகியோரை சோதனை செய்த போது, மதுபாட்டில்கள் இருந்தன.

இதையடுத்து, அவர்களை கைது செய்து, 750 மி.லி., கொண்ட, 290 ரூபாய் மதிப்புள்ள, 80 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement