தென்னை பாதுகாப்பில் 'ட்ரோன்கள்' பாரதிய கிசான் சங்கம் வலியுறுத்தல்

மதுரை: மேலுார், கொட்டாம்பட்டி, திருப்பரங்குன்றம் பகுதிகளில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. தென்னையைத் தாக்கும் காண்டாமிருக கூன் வண்டு, வாடல் நோயால் பல நுாறு தென்னை மரங்கள் 2 மாதங்களில் அகற்றப்பட்டன. உயரமான தென்னை மரத்தின் ஓலை அடிப்பகுதியில் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் தொழில்நுட்பம் தமிழகத்தில் இல்லை. இதற்காக மாவட்டத்திற்கு இரண்டு 'ட்ரோன்களை' தமிழக அரசு வழங்க வேண்டும் என பாரதிய கிசான் சங்க மாநிலத் தலைவர் பார்த்தசாரதி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: தென்னை மரங்களை நோய் தாக்கி இழக்கும் போது பொருளாதார ரீதியாக இழப்பை சந்திக்கிறோம். இதற்கு மாற்று வழி 'ட்ரோன்' தொழில்நுட்பம். மாவட்டத்திற்கு 2 'ட்ரோன்' அரசு வழங்க வேண்டும். வாடகைக்கு 'ட்ரோன்'களை விட்டால் குறைந்த கட்டணத்தில் தண்ணீர், மருந்துகளை தென்னை மரங்களின் அடி ஓலைகளில் பீய்ச்சி அடிக்க முடியும் என்றார்.

Advertisement