பிம்ஸ் மருத்துவ கல்லுாரியில் மருத்துவ கல்வி திருவிழா

புதுச்சேரி, ஜூலை 10-

பிம்ஸ் மருத்துவ கல்லுாரி கல்வி திருவிழாவில் மருத்துவ நோயியல் குறித்து விவாதிக்கப்பட்டது.

கனகசெட்டிக்குளம்பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் கல்வி திருவிழா யுக்கனக்ஸ்-2025 என்ற பெயரில் இருநாட்கள் கல்லூரி அரங்கில் நடந்தது.கல்லூரி முதல்வர் ரேணு தலைமை தாங்கினார். முதல் நாள் நிகழ்வில் பிரபல நுண்ணுயிரியல் மருத்துவ பேராசிரியர் சதீஷ் அமர்நாத், இரண்டாம் நிகழ்வில் கதிரியக்க பேராசிரியர் மேத்யூ செரியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.மருத்துவ கல்வியியல் பேராசிரியர் நாயர் இக்பால், துணை முதல்வர் நிஷாந்த் முன்னிலை வகித்தனர். மருத்துவ மாணவர் குழு செயலர்கள் திவ்யான்ஷ்மற்றும் லோக்ஸனா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

இரு நாட்கள் நடந்த இந்த கல்வி திருவிழாவில், வினாடி - வினா, மருத்துவ பயிற்சி பட்டறை, ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிப்பு மருத்துவ நோயியல் துறை குறித்த அலசல்கள் உள்ளிட்டவை இடம்பெற்றன. விழாவில், கல்வி திருவிழாவில் யுக்கனாக்ஸ் - 2025 டீ ஷர்ட் அறிமுகப்படுத்தப்பட்டது. மருத்துவம் தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. கல்வி திருவிழாவில்35 மருத்துவ நிறுவனங்களிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement