கஞ்சா: 4 பேருக்கு 10 ஆண்டு சிறை

மதுரை: மதுரையில் 2023ல் கரிமேடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியாக வந்த காரில் 51 கிலோ கஞ்சா இருந்தது பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அச்சம்பத்து கண்ணதாசன் 38, தத்தனேரி பிரகாஷ் ராஜ் 30, பாலகுரு33, கே.கே.நகர் குமார் 35 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இவ்வழக்கு மாவட்ட இரண்டாவது கூடுதல் போதை பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்தது. 4 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Advertisement