விலை குறைந்த தக்காளி
ஒட்டன்சத்திரம்: வரத்து அதிகரித்துள்ள நிலையில் ஆந்திரா வியாபாரிகளும் கொள்முதல் செய்ய வராததால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை கிலோ ரூ.28 லிருந்து ரூ.18 ஆக குறைந்தது.
ஒட்டன்சத்திரம், சாலைப்புதுார், அம்பிளிக்கை, கப்பலப்பட்டி சுற்று பகுதிகளில் தக்காளி அதிகமாக பயிரிடப்படுகிறது. சில நாட்களாக வரத்து குறைந்த நிலையில் கிலோ தக்காளி ரூ.28 க்கு மேல் விற்பனையானது. ஆந்திராவில் தக்காளி அறுவடை தொடர்வதால் அங்குள்ள வியாபாரிகள் அங்கேயே தக்காளியை கொள்முதல் செய்து விடுகின்றனர். தற்போது இரண்டு நாட்களாக வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளி விலை குறைந்து கிலோ ரூ.18க்கு விற்பனையானது.
கமிஷன் கடை உரிமையாளர் முருகேசன் கூறுகையில், ஆந்திரா வியாபாரிகள் கொள்முதல் செய்யத் தொடங்கிய பின்புதான் தக்காளி விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாய்க்கடியால் வந்த விபரீதம்; எம்.பி.ஏ., பட்டதாரி உயிரிழப்பு
-
பிரசவித்த பெண் அலைக்கழிப்பு; ரூ.60 ஆயிரம் நஷ்டஈடு வழங்க தனியார் மருத்துவமனைக்கு உத்தரவு
-
விவசாயியாக மாறிய இந்திய விண்வெளி வீரர் சுக்லா: வெந்தயம், பச்சைப்பயறு நாற்று வளர்த்து அசத்தல்
-
சண்டையின் ரகசியம் இது தானா ?
-
வல்லக்கோட்டை கோவிலில் நடந்தது வன்கொடுமை அல்ல; பெண் கொடுமை என்கிறார் தமிழிசை
-
சூரிய குளியலின் போது டிரம்ப் கொல்லப்படலாம்; ஈரான் மிரட்டல்
Advertisement
Advertisement