புகையிலை பதுக்கியவர் கைது

போடி: போடி அருகே ரங்கநாதபுரம் வடக்கு ராஜா தெருவை சேர்ந்தவர் பெருமாள்சாமி 54. இவர் தனது பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டு களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்து இருந்தார்.

போடி தாலுாகா போலீசார் பெருமாள்சாமியை கைது செய்து அவரிடம் இருந்த 225 புகையிலை பாக்கெட்டுகள், விற்பனை செய்த பணம் ரூ.9200 யை பறிமுதல் செய்தனர்.

Advertisement