ஆண்டிபட்டியில் போலீசார் முன் சோப் ஆயில் குடித்த கைதி

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே அரப்படித்தேவன்பட்டியை சேர்ந்தவர் காமேஸ்வரன் 20, இரு நாட்களுக்கு முன் கஞ்சா வழக்கில் இவரை கைது செய்த போலீசார் ஜெயிலுக்கு கொண்டு செல்வதற்காக ஆண்டிபட்டி போலீஸ் ஸ்டேஷனில் வைத்திருந்தனர்.

அப்போது ஆண்டிபட்டி போலீஸ் ஸ்டேஷன் கழிப்பறையை சுத்தம் செய்வதற்காக துப்புரவு பணியாளர் சென்றுள்ளார். அந்நேரம் தான் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று காமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவரை கழிப்பறைக்கு அழைத்துக் கொண்டு போலீசார் சென்றுள்ளனர். காமேஸ்வரன் திடீரென்று துப்புரவு பணியாளர் கையில் இருந்த சோப் ஆயில் பிடுங்கி குடித்து விட்டார். உடனடியாக தடுத்த போலீசார் அவரை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சைக்கு பின் தேக்கம்பட்டி ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

Advertisement