கடலுாரில் 17 அம்ச கோரிக்கை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கடலுார்: கடலுாரில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கடலுார் மாவட்ட அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் மற்றும் அனைத்து ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பொதுத்துறை நிறுவனங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். தனியார் மயமாக்கலை தவிர்த்தல் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் பாரதி ரோடு கடலுார் இந்தியன் வங்கி மண்டல அலுவலகம் முன்பு நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு கடலுார் மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ராவ் தலைமை தாங்கினார். சிதம்பரம் நகர வங்கி ஊழியர் சங்கம் கலியபெருமாள் வரவேற்றார். நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் வைத்திலிங்கம், எல்.ஐ.சி., ஊழியர் சங்கம் வேல்ராஜ், மருதவாணன், ஜெயராம், ஜெயஸ்ரீ, வெங்கடேசன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
கடலுார் வங்கி ஊழியர் சங்க நிர்வாகி கலைவாணன் நன்றி கூறினார்.
மேலும்
-
டில்லியில் நொடிப்பொழுதில் நொறுங்கிய 4 மாடி கட்டடம்: இடிபாடுகளில் தவிக்கும் 12 பேர்
-
ஜம்முகாஷ்மீர் வரை எட்டி பார்த்த U வடிவ பள்ளி பெஞ்ச் முறை: முன் மாதிரியாக மாறிய கேரளா
-
ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்துக்கு காரணம் என்ன? முதற்கட்ட அறிக்கையில் முக்கிய தகவல்!
-
டெக்ஸாசில் மழை வெள்ளம்; 120 பேர் பலி; 161 பேர் மாயம்; அதிபர் டிரம்ப் நேரில் ஆய்வு
-
வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.73 கோடி சொத்து: தேனி நகராட்சி கமிஷனர் மீது வழக்கு
-
ஒரே கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் 3 பேர் குளத்தில் மூழ்கி மரணம்: தஞ்சாவூரில் சோகம்!