சில வரி செய்திகள்...

காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பொங்கலுார் ஒன்றியம், ராமம்பாளையம் காளியம்மன், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ கருப்பராயன் கன்னிமார் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது தொடர்ந்து சுதர்சன மகாலட்சுமி ஹோமம், தனபூஜை, பூர்ணாகுதி, சிலைகளுக்கு கண் திறப்பு, எந்திர ஸ்தாபனம், முளைப்பாலிகை எடுத்து வருதல், வாஸ்து சாந்தி, கும்பலங்காரம், யாகசாலை பிரதேசம், முதற்காலயாக பூஜை, மண்டபார்ச்சனை, வேதிகார்ச்சினை ஆகியன நடந்தது. காலை திருப்பள்ளி எழுச்சி, இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. காலை, 9:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோில் தலைமை அர்ச்சகர் முத்து சுப்பிரமணிய சிவாச்சாரியார் தலைமையிலான குழுவினர் பூஜைகளை நடத்தி வைத்தனர். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement