உருதுமொழி பேசும் முஸ்லிம்கள் மனு

கோவை; உருதை தாய்மொழியாக கொண்ட தக்னி முஸ்லிம்களை, டவுன் காஜியாக நியமிக்க வேண்டும் என்று, கலெக்டரிடம் உருதுமொழி பேசும் முஸ்லிம்கள் மனு கொடுத்தனர்.

இது தொடர்பாக, ஐகோர்ட் தீர்ப்பை கலெக்டர் கவனத்தில் கொள்ள வேண்டும்; ஏற்கனவே, உருது மொழியை தாய்மொழியாக கொண்ட, தக்னி முஸ்லிம்கள் டவுன் காஜி பதவியில் இருந்ததை, மாவட்ட தக்னி ஜமாத் நிர்வாகிகள், மனுவில் சுட்டிக்காட்டியிருந்தனர். மாவட்ட அனைத்து தக்னி ஜமாத் கூட்டமைப்பு, தக்னி அஹ்லே சுன்னத் ஜமாத், ஹைதர் அலி திப்புசுல்தான் தக்னி சுன்னத் ஜமாத் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Advertisement