மர்மமான முறையில் கரூர் வாலிபர் இறப்பு

பாலக்காடு; பாலக்காட்டில் கரூரை சேர்ந்த வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தமிழகத்தில், கரூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், 29. இவரும், கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த நண்பர் ஒருவரும், நேற்று முன்தினம் மாலை பாலக்காடு ஸ்டேடியம் பஸ் ஸ்டாண்ட் அருகில் தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று மாலை, 3:00 மணிக்கு, லாட்ஜின் அருகே உள்ள புதருக்குள் மர்மமான முறையில் மணிகண்டன் இறந்து கிடப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த, பாலக்காடு டவுன் தெற்கு போலீசார், விசாரணை நடத்தி மணிகண்டன் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், அவருடன் தங்கியிருந்த நபரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement