1998ம் ஆண்டு கோவை தொடர் குண்டு வெடிப்பு; முக்கிய குற்றவாளி 28 ஆண்டுக்கு பிறகு கைது

கோவை: கோவையில் 1998ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான டெய்லர் ராஜா, 28 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (ஜூலை 10) கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார்.
கோவையில், 1998ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்துக்கு வந்திருந்த பா.ஜ., மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, ஆர்.எஸ்.புரம் டி.பி.,ரோடு சந்திப்பில் பேச இருந்த மேடைக்கு அருகே குண்டு வெடித்தது. தொடர்ந்து, கோவையில், 14 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.
அதில், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என, 58 பேர் கொல்லப்பட்டனர்; 250 பேர் படுகாயம் அடைந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நாட்டை உலுக்கிய இச்சம்பவத்தை விசாரிக்கும் வழக்கு, கோவை மாநகர போலீசிடம் இருந்து, சிறப்பு புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.
விசாரணைக்கு பின், தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்க நிறுவனர் பாஷா உட்பட, 166 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய பலரும் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் தண்டிக்கப்பட்டனர். இன்னும் சிலர் சிறையில் உள்ளனர். எனினும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவர் மட்டும் போலீசில் சிக்காமல் தலைமறைவாகி விட்டனர்.
இந்நிலையில், இன்று (ஜூலை 10) முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான டெய்லர் ராஜா, 28 ஆண்டுகளுக்குப் பிறகு கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார். கடந்த 1996ம் ஆண்டு கோவையில், பெட்ரோல் குண்டு வீசியதில் ஜெயிலர் பூபாலன் உயிரிழந்த வழக்கிலும், நாகூரில் சயீதா கொலை வழக்கிலும், 1997ம் ஆண்டு மதுரையில் சிறை அதிகாரி ஜெயபிரகாஷ் கொலை வழக்கிலும் இவர் முக்கிய குற்றவாளி ஆவார்.இன்று டைலர் ராஜாவை போலீசார் கோவை அழைத்து வருகின்றனர்.
இதையொட்டி கோவை மாநகரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இருந்தும் போலீசார் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
வாசகர் கருத்து (24)
பா மாதவன் - chennai,இந்தியா
11 ஜூலை,2025 - 06:32 Report Abuse

0
0
Reply
c.mohanraj raj - ,
10 ஜூலை,2025 - 18:39 Report Abuse

0
0
Reply
RAMESH - ,இந்தியா
10 ஜூலை,2025 - 16:11 Report Abuse

0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
10 ஜூலை,2025 - 16:10 Report Abuse

0
0
Reply
sasidharan - coimbatore,இந்தியா
10 ஜூலை,2025 - 14:49 Report Abuse

0
0
Reply
Kumar Kumzi - ,இந்தியா
10 ஜூலை,2025 - 14:45 Report Abuse

0
0
Reply
shakti - vilupuram,இந்தியா
10 ஜூலை,2025 - 14:12 Report Abuse

0
0
Reply
பேசும் தமிழன் - ,
10 ஜூலை,2025 - 12:43 Report Abuse

0
0
Reply
ஆரூர் ரங் - ,
10 ஜூலை,2025 - 11:39 Report Abuse

0
0
Reply
xyzabc - ,இந்தியா
10 ஜூலை,2025 - 11:35 Report Abuse

0
0
Reply
மேலும் 14 கருத்துக்கள்...
மேலும்
-
டில்லியில் நொடிப்பொழுதில் நொறுங்கிய 4 மாடி கட்டடம்: இடிபாடுகளில் தவிக்கும் 12 பேர்
-
ஜம்முகாஷ்மீர் வரை எட்டி பார்த்த U வடிவ பள்ளி பெஞ்ச் முறை: முன் மாதிரியாக மாறிய கேரளா
-
ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்துக்கு காரணம் என்ன? முதற்கட்ட அறிக்கையில் முக்கிய தகவல்!
-
டெக்ஸாசில் மழை வெள்ளம்; 120 பேர் பலி; 161 பேர் மாயம்; அதிபர் டிரம்ப் நேரில் ஆய்வு
-
வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.73 கோடி சொத்து: தேனி நகராட்சி கமிஷனர் மீது வழக்கு
-
ஒரே கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் 3 பேர் குளத்தில் மூழ்கி மரணம்: தஞ்சாவூரில் சோகம்!
Advertisement
Advertisement