சந்திர மவுலீஸ்வரருக்கு பிரதோஷ சிறப்பு வழிபாடு

திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், சந்திர மவுலீஸ்வரருக்கு பிரதோஷ சிறப்பு வழிபாடு நேற்று முன்தினம் நடந்தது.
இதையொட்டி, காலை 9:30 மணியளவில் உலக மக்கள் நலன்வேண்டி, மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. மாலை 6:00 மணியளவில் பிரகாரத்தில் உள்ள சந்திர மவுலீஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், பன்னீர், திரவியப்பொடி ஆகியவைகளால் அபிஷேகம்; 6:30 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜம்முகாஷ்மீர் வரை எட்டி பார்த்த U வடிவ பள்ளி பெஞ்ச் முறை: முன் மாதிரியாக மாறிய கேரளா
-
ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்துக்கு காரணம் என்ன? முதற்கட்ட அறிக்கையில் முக்கிய தகவல்!
-
டெக்ஸாசில் மழை வெள்ளம்; 120 பேர் பலி; 161 பேர் மாயம்; அதிபர் டிரம்ப் நேரில் ஆய்வு
-
வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.73 கோடி சொத்து: தேனி நகராட்சி கமிஷனர் மீது வழக்கு
-
ஒரே கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் 3 பேர் குளத்தில் மூழ்கி மரணம்: தஞ்சாவூரில் சோகம்!
-
சீர்திருத்த நடவடிக்கையில் டிரம்ப் வேகம்: ஒரே நாளில் 1300 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்
Advertisement
Advertisement