பாழாகும் விளையாட்டுத் திடல் சீரமைக்க இளைஞர்கள் கோரிக்கை

பெண்ணாடம்: கோவிலுார் ஊராட்சியில் உள்ள விளையாட்டுத் திடலை சீரமைக்க வேண்டும் என இளைஞர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நல்லுார் ஒன்றியம், பெண்ணாடம் அடுத்த கோவிலுார் ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கிராம இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்கப்படுத்த, அதே பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், 5 ஏக்கர் பரப்பில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் விளையாட்டுத் திடல் அமைக்கப்பட்டது.

அதில், வாலிபால், கூடைப்பந்து உபகரணங்கள் மற்றும் உடற்பயிற்சி சாதனங்கள் அமைக்கப்பட்டிருந்தன. போதிய பராமரிப்பின்றி நாளடைவில் உபகரணங்கள் பாழாகி வருவதுடன், மீதமுள்ள உபகரணங்களையும் சமூக விரோதிகள் பெயர்த்து எடுத்துச் சென்றனர். 4 ஆண்டுகளுக்கு பிறகு விளையாட்டுத் திடல் சீரமைக்கப்பட்ட நிலையில், தற்போது, விளையாட்டுத் திடல் பராமரிப்பின்றி உபகரணங்கள் மற்றும் முட்செடிகள் மண்டியுள்ளன.

இதனால் இளைஞர்கள், மாணவர்கள் மாலை நேரம், விடுமுறை நாட்களில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கோவிலுாரில் உள்ள விளையாட்டு திடலை சீரமைத்து இளைஞர்கள், மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement