ஹாக்கி: இந்தியா 'ஏ' அசத்தல்

ஐந்தோவன்: சர்வதேச ஹாக்கி போட்டியில் இந்தியா 'ஏ' அணி, பிரான்சை வீழ்த்தியது.
நெதர்லாந்து சென்றுள்ள சஞ்சய் தலைமையிலான இந்தியா 'ஏ' ஹாக்கி அணி, 8 போட்டிகளில் விளையாடுகிறது. முதலிரண்டு போட்டியில் அயர்லாந்தை வீழ்த்திய இந்தியா, நேற்று நடந்த 3வது போட்டியில் பிரான்சை எதிர்கொண்டது. அபாரமாக ஆடிய இந்திய அணி 3-2 என்ற கணக்கில் 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணிக்கு ஆதித்யா அர்ஜுன் 2, பாபி சிங் தாமி ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். பிரான்ஸ் அணிக்கு கிளமென்ட் 2 கோல் அடித்து ஆறுதல் தந்தார்.
இந்திய அணியின் பயிற்சியாளர் ஷிவேந்திரா சிங் கூறுகையில், ''இந்திய வீரர்களின் கடினமான பயிற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. பயிற்சியின் போது வகுத்த திட்டங்களை போட்டியில் சரியாக செயல்படுத்தினர்,'' என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
4 பேருக்கு நியமன எம்.பி., பதவி: அறிவித்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
-
ஊழல் குற்றச்சாட்டு எதிரொலி; ஷேக் ஹசீனா மகளை விடுப்பில் அனுப்பியது உலக சுகாதார நிறுவனம்
-
நீதிமன்ற பெயரை தவறாக பயன்படுத்திய பெண் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை
-
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, அ.தி.மு.க., பற்றி நான் இழிவாக பேசவில்லை: வைகோ
-
புது கட்சி துவக்குகிறார் அன்புமணி?
-
பள்ளிகளில் 'ப' வடிவில் இருக்கை வசதி: உத்தரவை நிறுத்தி வைத்தது தமிழக அரசு
Advertisement
Advertisement