முழுமையான பா.ஜ.,வாக மாறி விட்டார் பழனிசாமி

1

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நான்காவது முறையாக தமிழகத்தில் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமையும் என்றும், அதில் கட்டாயம் பா.ஜ., பங்கேற்கும் என்றும் தெள்ளத் தெளிவாக கூறியுள்ளார். அவர் எதற்காக இதை திரும்ப திரும்ப கூறுகிறார் என்பது, கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் தெரியும்; இருந்தும், தெரியாதது போல உள்ளனர். தமிழகத்தில் பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறாது.

ஹிந்து அறநிலையத்துறை நிதியில் கல்லுாரி கட்டக்கூடாது என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறுவது வேடிக்கையானது. தமிழக அரசின் நடவடிக்கை சட்டத்துக்கு உட்பட்டது என தெளிவாக தெரிந்த பின்னரும், பழனிசாமி, அரசை விமர்சிப்பது சரியல்ல. பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்ததில் இருந்து, முழுமையாக பா.ஜ.,க்காரராகவே பழனிசாமி மாறி விட்டார்; காவி துண்டு போடாதது தான் பாக்கி.

-சண்முகம்,

மாநில செயலர்,

மார்க்சிஸ்ட் கம்யூ.,

Advertisement