'சாமி' படத்தில் வில்லனாக அறிமுகமான நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!

ஹைதராபாத்: தமிழில் 'சாமி' படத்தில் வில்லனாக அறிமுகமான நடிகர் கோட்டா சீனிவாச ராவ்,83, உடல்நல குறைவால் இன்று காலமானார்.
ஆந்திராவை சேர்ந்த பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் ஜூலை 10ம் தேதி, 1942ம் ஆண்டு ஆந்திரா மாநிலம், விஜயவாடாவில் பிறந்தார். இவருக்கு வயது 83.
இவர் குணசித்திர வேடத்திலும், வில்லன் வேடத்திலும் நடித்து பிரபலமானார். 2003ம் ஆண்டு வெளியான சாமி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். 1999 - 2004ம் ஆண்டு வரை ஆந்திர பிரதேச விஜயவாடா கிழக்குத் தொகுதியின் சட்டசபை உறுப்பினராக இருந்துள்ளார்.
மேலும், திருப்பாச்சி, குத்து, ஏய், கோ, சகுனி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் என பல்வேறு திறன்களை கொண்டுள்ளார். மொத்தம் 750 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக 2023ம் ஆண்டு சுவர்ண சுந்தரி என்ற படம் வெளியானது.
கடந்த சில தினங்களாக, உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் (83) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இன்று (ஜூலை 13) அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.








மேலும்
-
கடலில் மூழ்கிய இலங்கை படகு; சுற்றுலா பயணிகள் உயிர் தப்பிய திக்...திக்...காட்சி!
-
செஞ்சி கோட்டை பெருமைக்கு 348 ஆண்டுகளுக்கு முன்பே அடித்தளமிட்ட சத்ரபதி சிவாஜி
-
இந்திய மாணவர் சேர்க்கை குறைந்தது: கனடா பல்கலை, கல்லுாரிகளில் 10,000 பேர் வேலை இழப்பு
-
டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகளில் சர்ச்சைக்குரிய கேள்விகள் கேட்கக்கூடாது; தேர்வாணைய தலைவர் தகவல்
-
தி.மு.க., சர்க்கார் சாரிம்மா மாடல் சர்க்காராக மாறி விட்டது; ஆர்ப்பாட்டத்தில் விஜய் ஆவேச பேச்சு!
-
டிரைவருக்கு மாரடைப்பு; அரசு பஸ் தாறுமாறாக சென்றதில் ஒருவர் பலி