உடற்கல்வி வகுப்புகள் மாணவர்கள் புறக்கணிப்பு?

பெங்களூரு: 'கர்நாடகாவில் 95 சதவீதத்துக்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் உடற்கல்வி வகுப்புகளில் கூட விளையாடுவதில்லை' என, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடகாவில் பள்ளி மாணவர்களுக்கு அதிகரித்து வரும் உடல்நல பிரச்னைகளுக்கான காரணத்தை கண்டறிய கே.ஏ.எம்.எஸ்., எனும் கர்நாடகா துவக்க மற்றும் இடைநிலை பள்ளிகளின் அசோஷியேட் மேலாண்மை எனும் அமைப்பு ஒரு ஆய்வை நடத்தியது.

இந்த ஆய்வின் முடிவில் பல 'திடுக்' தகவல்கள் வெளியாகி உள்ளன. மாணவர்கள் அதிகமாக உட்கார்ந்தே இருப்பது, மோசமான உணவு பழக்கம், பள்ளி, வீடுகளிலும் உடல் ரீதியான செயல்பாடுகள் இல்லாததால் எளிதில் நோய்களால் பாதிப்பு அடைகின்றனர். பள்ளியில் உடற்பயிற்சி வகுப்புகளில் 95 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் ஓடி, ஆடி விளையாடுவதில்லை. விளையாட்டுகளில் கலந்து கொள்வதை புறக்கணிக்கின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement