கடலில் மூழ்கிய இலங்கை படகு; சுற்றுலா பயணிகள் உயிர் தப்பிய திக்...திக்...காட்சி!

5


கொழும்பு: கடலில் மூழ்கிய இலங்கை படகில் இருந்த சுற்றுலா பயணிகள் உட்பட 14 பேர் உயிர் தப்பிய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.


இலங்கையில், யாழ்ப்பாணம் மாவட்டம் நெடுந்தீவைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான படகில் இன்று காலை சுற்றுலா பயணிகள் சென்று கொண்டிருந்தனர். நெடுந்தீவுக்கு சென்றுவிட்டு சிறிது நேரம் சுற்றிப்பார்த்து விட்டு திரும்பிய போது, படகில் கோளாறு ஏற்பட்டது.
ஒரு சில நிமிடங்களில் படகு கடலில் மூழ்கத் தொடங்கியது. அதில் இருந்த ஊழியர்கள், சற்று தொலைவில் வேறு ஒரு படகு வருவதை கண்டனர். அந்த படகில் இருப்பவர்களுக்கு தென்படும் வகையில் பெரிய வெள்ளைத்துணியை ஆட்டினர். வெள்ளைக்கொடி காட்டப்படுவதை கண்டதும், தொலைவில் படகில் வந்தவர்கள், 'ஏதோ விபரீதம்' என்பதை புரிந்து கொண்டு அருகில் வந்தனர்.

பக்கத்தில் வந்ததும், 'எங்கள் படகு மூழ்குகிறது, எங்களை காப்பாற்றுங்கள்' என்று சுற்றுலா படகில் இருந்தவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதன்படி, சுற்றுலா பயணிகள், படகு ஊழியர்கள் என 14 பேரும் காப்பாற்றப்பட்டனர். அவர்கள் அனைவரும், இலங்கை குறிகாட்டுவானை துறைமுகத்தில் பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டனர்.

சுற்றுலா பயணிகள், மூழ்கும் படகில் இருந்து காப்பாற்றப்படும் திடுக் காட்சிகள், மீட்பு படகில் இருந்தவர்களால் படம் பிடிக்கப்பட்டன. அந்த திக்...திக்... காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

Advertisement