கொடைக்கானலில் வறண்ட அருவிகள்

கொடைக்கானல்: கொடைக்கானலில் உள்ள முக்கிய அருவிகளில் நீர்வரத்து குறைந்துள்ளது.

சுற்றுலா தலமான கொடைக்கானலில் நீடிக்கும் குளுகுளு சீதோஷ்ண நிலையை அனுபவிக்க ஏராளமான பயணிகள் நாள்தோறும் வருவது வழக்கம். இரு மாதங்களாக வறண்ட வானிலை நீடித்தும், சூறைக்காற்று வீசி மழைப்பொழிவில்லை. இதனால் இங்குள்ள முக்கிய நீர்ப்பிடிப்புகள் வறண்டன.

கொடைக்கானலில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி, கரடிச்சோலை, பாம்பார், தேவதை, புலிச்சோலை, புலவிச்சாறு பெப்பர் அருவி உள்ளிட்ட முக்கிய அருவிகளில் நீர்வரத்து குறைந்தது.

ஆர்பரித்துக் கொட்டிய அருவிகள் நீர்வரத்து குறைந்து சிற்றோடை போல் மாறி உள்ளது.

Advertisement