சதி திட்டம் தீட்டுபவர்கள்தான் ராமதாசிடம் உள்ளனர்; அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ., சிவக்குமார் பேட்டி

விழுப்புரம் : விழுப்புரத்தில் சிவக்குமார் எம்.எல்.ஏ., அளித்த பேட்டி;

ராமதாஸ் வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி குறித்து நாங்களும் விசாரணை செய்ய கூறியுள்ளோம். அதை யார் வைத்தது என காவல் துறை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும்.


அந்த கருவி 10 நாட்களுக்கு ஒருமுறை சார்ஜ் போட வேண்டும் என்கின்றனர். அன்புமணி தைலாபுரம் தோட்டத்திற்கு ஒன்றரை மாதத்திற்கு முன்புதான் வந்தார். அப்படி என்றால், 10 நாட்களுக்கு ஒருமுறை கருவிக்கு யார் சார்ஜ் போட்டது. அன்புமணி பக்கம் 90 சதவீத தொண்டர்கள் உள்ளனர். ராமதாசிடம் சதி திட்டம் தீட்டுபவர்கள் மட்டுமே உள்ளனர்.

அன்புமணி தலைமையில் தான் பா.ம.க., உள்ளது. பொதுக்குழு கூட்டும் அதிகாரம் அன்புமணியிடம் உள்ளது. மாவட்ட செயலாளர்கள், 3 எம்.எல்.ஏ.,க்கள் அன்புமணியிடம் இருக்கின்றனர்.



தேர்தலில் சின்னம், வரும் 2026ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி வரை பா.ம.க., தலைவராக அன்புமணி தொடர்வார் என கடிதம் கொடுத்துள்ளனர். அதை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.



ராமதாஸ், அன்புமணி தலைமையில் கூட்டணி அமையும். சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., அருளை கட்சியில் இருந்து நீக்கியதால், என்னை சட்டசபை கொறடாவாக அறிவித்து சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தோம். அருள், தானே கொறடாவாக தொடருவதாக கடிதம் கொடுத்துள்ளார். சபாநாயகர் நேர்மையான முறையில் நடவடிக்கை எடுப்பார். கொறடாவாக நான் தொடர்வேன். இவ்வாறு சிவக்குமார் கூறினார்.

Advertisement