ஆவின் நிறுவனத்தில் வாயு கசிவால் பரபரப்பு

விழுப்புரம் : விழுப்புரம் ஆவின் நிறுவனத்தில் சிலிண்டர் குழாய் உடைந்து அமோனியா வாயு கசிந்ததால் பரபரப்பு நிலவியது.


விழுப்புரம் ஆவின் நிறுவனம், பால் குளிரூட்டும் நிலையத்தில் குளிரூட்ட பயன்படுத்துவதற்காக சிலிண்டர்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலிண்டர்களில் இருந்து செல்லக்கூடிய குழாயில் நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில் திடீரென உடைப்பு ஏற்பட்டு, அமோனியா வாயு கசிந்தது.இந்த வாயு, காற்றில் வேகமாக பரவியதால் ஆவின் நிறுவனத்தை சுற்றியுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் குழந்தைகள், முதியவர்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டது.



தகவலறிந்த விழுப்புரம் தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்து சென்று, வாயு கசிவு ஏற்பட்ட பகுதியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் போராடி உடைப்பை சரி செய்தனர்.அதன்பின், அப்பகுதி குடியிருப்புகளில் இயல்பு நிலை திரும்பியது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement