களத்துார் கழிப்பறை வளாகம் மகளிர் பயன்பாட்டிற்கு திறப்பு

அச்சிறுபாக்கம்:-நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, அச்சிறுபாக்கம் அடுத்த களத்துார் ஊராட்சியில், புதுப்பித்தல் பணி முடிந்து பூட்டி வைக்கப்பட்டிருந்த மகளிர் கழிப்பறை வளாகம், பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட களத்துார் ஊராட்சியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
களத்துாரில் இருந்து ஜெ.ஜெ.,நகர் பகுதிக்குச் செல்லும் சாலையோரம், மகளிர் பயன்பாட்டிற்காக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், 6 லட்சம் ரூபாய் மதிப்பில், கழிப்பறை வளாகம் கட்டப்பட்டது.
நாளடைவில் இந்த கழிப்பறை வளாகம் பழுதடைந்ததால், 15வது மாநில நிதிக்குழு திட்டம் 2021 -- 22ன் கீழ், 1.82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டது.
பணிகள் முடிந்து இரண்டு ஆண்டுகளாகியும், மகளிர் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல், பூட்டி வைக்கப்பட்டிருந்தது.
இந்த கழிப்பறை வளாகத்தை மகளிர் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுமென, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, கழிப்பறை வளாகம் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டு உள்ளது.
மேலும்
-
சிறை காவலர்களுக்கு இருண்ட காலம்: கூடுதல் டி.ஜி.பி., மீது பகீர் குற்றச்சாட்டு
-
ஆவின் நிறுவனத்தில் வாயு கசிவால் பரபரப்பு
-
சதி திட்டம் தீட்டுபவர்கள்தான் ராமதாசிடம் உள்ளனர்; அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ., சிவக்குமார் பேட்டி
-
4 ஆண்டுகளாக ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறது அ.ம.மு.க., தினகரன் சாடல்
-
கஷ்டத்தில் தி.மு.க., அரசு; அமைச்சர் நேரு வருத்தம்
-
லண்டனில் புறப்பட்ட சில வினாடிகளில் விமானம் விபத்து; விமான சேவை பாதிப்பு!