'குரு சரணம்' சிறப்பு சாய் பஜன் நிகழ்ச்சி

திருப்பூர்; திருப்பூர், பி.என்., ரோடு, ராம்நகர், ஸ்ரீ சத்ய சாய் விகார் நிலையத்தில், ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் திருப்பூர் மாவட்டம் சார்பில், குரு சரணம் சிறப்பு சாய்பஜன் நிகழ்வு நேற்று நடந்தது. வாழ்க்கைக்கு வளம் தரும் யோகா எனும் தலைப்பில், யோகா பயிற்றுநர் சங்கர் பேசினார். பால விகாஸ் குருமார்கள் பங்கேற்று, சாய்பாபாவின், 100 வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசித்தனர்.

இளைஞர் கூட்டம்



நிகழ்வின் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்ட இளைஞர்கள் கூட்டம் நடந்தது. பஜன், ஜோதி தியானம் நிகழ்வுக்கு பின், கோவை மாவட்ட இளைஞரணி அணி ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் ' எப்போதும் நம்மை பகவான் பாபாவிடம் இணைத்துக் கொண்டு சேவை செய்ய வேண்டும்' எனும் தலைப்பில் அறிவுரைகளை வழங்கினார். இளைஞர்கள், பாலவிகாஸ் பயிற்சி முடித்த மாணவர்கள் பங்கேற்றனர்.

இலவச பயிற்சி



ஸ்ரீ சத்ய சாய் திறன் மேம்பாட்டு மையம் (தமிழ்நாடு தெற்கு) சார்பில், டேலி குறித்த ஆறு மாத ஆன்லைன், ஆப்லைன் பயிற்சி துவங்கப்பட்டுள்ளது. முன்னேற்பாடுகளை, பல்லடம் ரோடு சமிதி பால விகாஸ் முன்னாள் மாணவர் தாமரைச்செல்வன் துவக்கி வைத்தார். ஞாயிறுதோறும் நடக்கும், இலவச பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் 8973494709, 9442570035 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

Advertisement