பணம் பறித்த ரவுடி கைது

மேட்டூர்: மேட்டூர், கவிபுரம், பொங்கியண்ணன் தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி கோகுலகண்ணன், 24. நேற்று காலை, 11:00 மணிக்கு, கருமலைக்கூடல், சிட்கோ மைக்ரோபார்ம் அருகே நடந்து சென்று-கொண்டிருந்தார்.


அப்போது, கருமலைக்கூடல், சின்னப்பகவுண்டர் தெருவை சேர்ந்த ரவுடி அபி-மன்யூ, 22, கத்தியை கோகுலகண்ணன் கழுத்தில் வைத்து மிரட்டி, 450 ரூபாயை பறித்து சென்றார். கோகுலகண்ணன் புகார்படி, கருமலைக்கூடல் போலீசார் நேற்று அபிமன்யூவை கைது செய்-தனர்.

Advertisement