தேசிய நெடுஞ்சாலை சென்டர் மீடியனில் தண்ணீரின்றி கருகும் செடிகள்

விழுப்புரம் : விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை சென்டர் மீடியனில் நடப்பட்டுள்ள செடிகள் தண்ணீரின்றி காய்ந்து கருகி வருகிறது.

விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே 179.5 கி.மீ., துாரத்திற்கு மத்திய அரசின் 6,431 கோடி ரூபாய் நிதியில் நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. விழுப்புரம் ஜானகிபுரத்திலிருந்து புதுச்சேரி மாநிலம், எம்.என்.குப்பம் வரை 29 கி.மீ., துாரத்திற்கான பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இச்சாலையின் சென்டர் மீடியனில் செடிகள், பூச்செடிகள் வைக்கப்பட்டுள்ளது. இதில், விழுப்புரம் அடுத்த கண்டமானடி, திருப்பாச்சனுார் உள்ளிட்ட பல இடங்களில் தண்ணீரின்றி செடிகள் காய்ந்து கருகி வருகிறது.

எனவே, சாலையின் நடுவில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்க நகாய் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement