காலையில் நன்றாகத்தான் பேசுகிறார்; மாலையில் குண்டு வீசுகிறார்; புடின் மீது டிரம்ப் பாய்ச்சல்!

வாஷிங்டன்: நன்றாக பேசிவிட்டு பின் அனைவர் மீதும் குண்டு வீசுகிறார் என ரஷ்ய அதிபர் புடின் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். ஆனால் உக்ரைனில் ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வாஷிங்டனில் நிருபர்கள் சந்திப்பில் டிரம்ப் கூறியதாவது: ரஷ்ய அதிபர் புடின் நன்றாக பேசிவிட்டு பின் அனைவர் மீதும் குண்டு வீசுகிறார்.
உக்ரைனுக்கு புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை அமெரிக்கா அனுப்ப உள்ளது. ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும். புடின் உண்மையிலேயே பலரை ஆச்சரியப்படுத்தினார். அவர் நன்றாகப் பேசுகிறார், பின்னர் மாலையில் அனைவரையும் தாக்குகிறார்.
அவர் [புடின்] தான் சொன்னதை புரிந்து கொள்வார் என்று நான் நினைத்தேன். அவர் இரவில் அனைவரையும் குண்டுவீசித் தாக்கி வருவது எங்களுக்கு பிடிக்கவில்லை. இதுவரை போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற போது உக்ரைன்- ரஷ்யா இடையே நிலவி வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என டிரம்ப் கூறியிருந்தார். ஆனாலும் போர் தொடர்ந்து நிலவி வருவதால், ரஷ்ய அதிபர் புடின் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.



மேலும்
-
சுமூகமான உறவு; சீனாவுக்கு ஜெய்சங்கர் அழைப்பு
-
உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் மீது 45 நாளில் தீர்வு: கூடுதல் தலைமை செயலாளர் அமுதா உறுதி
-
கனடா இந்தியர்கள் ரத யாத்திரையில் முட்டை வீசி தாக்குதல்: இனவெறி கும்பல் அட்டூழியம்
-
நடிகை சரோஜாதேவி மறைவு : முதல்வர், இபிஎஸ், ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல்
-
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 4 பேர் தமிழக அரசின் செய்தி தொடர்பாளராக நியமனம்
-
போதைப்பொருள் விற்பனை விவகாரம்; மல்லிகார்ஜூன கார்கே மகனுக்கு நெருக்கமானவர் கைது