போதைப்பொருள் விற்பனை விவகாரம்; மல்லிகார்ஜூன கார்கே மகனுக்கு நெருக்கமானவர் கைது

தானே: போதைப்பொருள் விற்றதாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகனும், கர்நாடகா அமைச்சருமான பிரியங்க் கார்கேவுக்கு நெருக்கமான காங்கிரஸ் நிர்வாகி கைது செய்யப்பட்டிருப்பது கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா அமைச்சர் பிரியங்க் கார்கேவுக்கு மிகவும் நெருக்கமான காங்கிரஸ் நிர்வாகி லிங்கராஜ் கன்னி. இவர் கல்புரகி தெற்கு மண்டல காங்கிரஸ் தலைவராக இருந்து வருகிறார். குல்பர்கா தக்ஷின் தொகுதி எம்.எல்.ஏ., அல்லமபிரபு பாட்டீலுடனும் மிகவும் நெருக்கமானவர்.
இவர் தானே நகரில் போதைப்பொருள் விற்ற போது மஹாராஷ்டிரா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து சுமார் 120 கோடீன் சிரப் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கர்நாடகாவைச் சேர்ந்த அமைச்சருக்கு நெருக்கமான காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும்
-
சுவர் ஏறி குதித்த முதல்வர் உமர் அப்துல்லா: அஞ்சலி நிகழ்ச்சியில் பரபரப்பு
-
விடுதியில் இருந்து தப்பிக்க முயற்சி: தெலுங்கானாவில் குருகுல மாணவி மரணம்
-
ஸ்டாலினுக்கு மக்களை பற்றி கவலையில்லை நெய்வேலியில் பழனிசாமி 'காட்டம்'
-
திருமணம் செய்ததால் போக்சோ வழக்கு ரத்து
-
காங்கிரஸ் எம்.பி.,க்களுடன் சோனியா ஆலோசனை
-
மணல் கொள்ளைக்கு கடுமையான சட்ட நடவடிக்கை: இ.பி.எஸ்., வலியுறுத்தல்