500 கோடி முறை பெண்கள் பயணம் 'சக்தி' திட்டத்திற்கு இன்று வெற்றி விழா
பெங்களூரு : 'சக்தி' திட்டத்தின் கீழ், அரசு பஸ்களில் பயணித்த பெண்கள் 500 கோடி முறை பயணித்துள்ளனர். திட்டத்தின் வெற்றியை கொண்டாட, இன்று விழா நடத்தப்படுகிறது.
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு அமைந்த பின், அமல்படுத்தப்பட்ட ஐந்து வாக்குறுதி திட்டங்களில் 'சக்தி' திட்டமும் ஒன்றாகும். மற்ற நான்கு திட்டங்களில், குளறுபடிகள் இருந்தாலும் இத்திட்டம் சிறப்பாக செயல்படுகிறது. பெண்களிடம் ஆதரவு கிடைத்துள்ளது.
தினமும் லட்சக்கணக்கான பெண்கள் பஸ்களில் பயணிக்கின்றனர். கோவில்களுக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
திட்டத்தின் கீழ் பயணித்த பெண்களின் எண்ணிக்கை, 500 கோடியை எட்டியுள்ளது. சக்தி திட்டத்தின் வெற்றியை கொண்டாட, தாலுகா, மாவட்ட அளவில் இன்று விழாக்கள் நடத்தப்படஉள்ளன.
இது குறித்து, வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்தும் கமிட்டியின் துணைத்தலைவி புஷ்பா அமர்நாத், மைசூரில் நேற்று அளித்த பேட்டி:
500 கோடி பெண்கள் பயணித்திருப்பது, பெரிய சாதனையாகும். இதை கொண்டாட, நாளை (இன்று) மாவட்ட, தாலுகா அளவில் விழா நடக்க உள்ளது.
இந்த வெற்றியை இனிப்பு வழங்கி, பெண்களுடன் சேர்ந்து கொண்டாட முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஊழியர்கள் அதிருப்தி
இதற்கிடையே சக்தி திட்டத்தின் கொண்டாட்டத்துக்கு, போக்குவரத்துக்கழக ஊழியர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து கழகங்களுக்கு, மாநில அரசு 8,000 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. இதனால் ஊழியர்களின் ஊதிய உயர்வுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, குற்றச்சாட்டுஎழுந்துள்ளது.
இது தொடர்பாக, போக்குவரத்துக்கழக ஊழியர்கள் சங்க தலைவர் சந்திரசேகர் கூறியதாவது:
மாநிலத்தின் நான்கு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு, ஊதியம் உயர்த்தப்படவில்லை. திட்டம் வெற்றி அடைந்ததை கொண்டாடும் அரசு, வெற்றிக்கு காரணமான ஊழியர்களின் நலனை காப்பதில் தோல்வி அடைந்துள்ளது. அரசின் செயலை கண்டிக்கிறோம்.
ஊதிய உயர்வு தாமதமாகிறது. இதனால் ஊழியர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். அரசின் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுகின்றன. இதற்காக உழைக்கும் ஊழியர்களுக்கு, பணிக்கு தகுந்த ஊதியம் இல்லாமல் வலுவிழந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
நடிகை சரோஜாதேவி மறைவு : முதல்வர், இபிஎஸ், ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல்
-
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 4 பேர் தமிழக அரசின் செய்தி தொடர்பாளராக நியமனம்
-
போதைப்பொருள் விற்பனை விவகாரம்; மல்லிகார்ஜூன கார்கே மகனுக்கு நெருக்கமானவர் கைது
-
வெள்ளி விழா படங்களில் முத்திரை பதித்த சரோஜா தேவி : வரிசை கட்டிய விருதுகள்
-
தமிழகத்தில் நடப்பது தம்பிகளின் ஆட்சி: எல்.முருகன் குற்றச்சாட்டு
-
காலையில் நன்றாகத்தான் பேசுகிறார்; மாலையில் குண்டு வீசுகிறார்; புடின் மீது டிரம்ப் பாய்ச்சல்!