தங்கவயல் செக் போஸ்ட்

எப்போது வரும் அக்கறை!

கோல்டு சிட்டிக்கு சட்டப்பிதா, 1954 ஜூலை 12ல் வந்தாரு. அப்போது அவரை வரவேற்க ஏராளமானோர் திரண்டாங்க. காலில் விழும் கலாச்சாரமே இருக்க கூடாது; அடிமை தனத்தை விட வேணும் என்ற லட்சியத்தில் உள்ள அவர் காலில் பலர் விழுந்ததால், வெறுப்பு ஏற்பட்டு கூட்டத்தில் பேசாமல் சென்று விட்டதாக நேரில் பார்த்தவங்க சொல்றாங்க.

கோல்டு சிட்டிக்கு அவர் வந்த அந்த நாளை தான், அறிவொளி தினமாக அனுஷ்டித்தாங்க. பூக்கார ஆட்சியில் சட்ட பிதா வந்து சென்ற இடங்களில் 10 ஏக்கரில், 5 கோடி ரூபாய் செலவில் நினைவு மண்டபம் கட்டுவதாக அறிவிச்சாங்க. அதில், கோல்டு சிட்டிக்கு இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கினதாகவும், நிலமும் ஒதுக்கியதாகவும் சொன்னாங்க. ஆனால் ஒதுக்கின இடத்தில், பேக்டரி வரப்போவதாக சொல்லி, அதனை ரத்து செய்தாங்க. எப்போ, எங்கே நினைவு மண்டபம் உருவாகுமோ.

ஜெயிக்க போவது யாரு?

கோலாரு, -சி.பல்லாபூரு பிரியாமல் ஒரே மாவட்டமா இருந்தப்போ, 'கோச்முல்' இயங்கியது; பிரிஞ்சப்போ அதை ரெண்டா ஆக்கி, 'கோமுல்', 'சிமுல்' என ஆக்கினாங்க. கோமுல் தலைவர் தேர்தலில், ப.பேட்டையை மாலுார் ஜெயிச்சிடுச்சி.

அடுத்து இன்னும் ரெண்டா பிரியாமல் ஒட்டியே இருக்கும் கூட்டுறவு வங்கியின் டைரக்டர்கள் தேர்தல் முடிஞ்சது; அதோட தலைவர் தேர்தல் நடக்க போகுது. இதுலயும் ரெண்டு அசெம்பிளிக்காரங்க போட்டியிட போறாங்களாம். போட்டி வலுக்குது.

ஏற்கனவே பல லுாட்டிகள் நடந்ததா பேசப்படும் கை கட்சியில தான், இந்த போட்டியும் வலுக்கிறதா சொல்லப் படுது. டைரக்டர்கள் தேர்தலில் போட்டியின்றி ஜெயிச்சவங்களே மீண்டும் மோதப்போறாங்க. சி.எம்., - டி.சி.எம்., தலையிட்டு பேசி தீர்க்க போறாங்களாம்.

புலி வருது புலி!

பெற்ற தாய் குப்பையில வீசி எறிந்தாலும், எனக்கு தாய் பாசம் விடாது; ஜனங்க எனக்கு ஓட்டு போட மறந்தாலும், நான் ஜனங்கள மறக்க முடியாதுன்னு கோல்டு சிட்டியின் பெரிய, 'தல' புதுக்கதை சொல்றாரு.

எனக்கா ஓட்டுப் போட்டீங்க; யாருக்கு ஓட்டு போட்டீங்களோ அவங்கள போய் கேளுங்கன்னு அவர் சொன்னதையும் கூட ஜனங்க மறக்கலயே.

லேண்ட் தகராறு, ஊழல் முறைகேடுகளுக்கு, ஆபீசர்களே காரணம்னு அவருக்கு ஞானோதயம் வந்திருக்குது லேட்டா. இதேபோல மருத்துவமனையில் இதய நோய்க்கு அடிக்கடி தொடருது மரணங்கள். இதை தடுக்க அவர் கவனம் செலுத்தணுமுன்னு யாராவது ஞாபகப்படுத்துறாங்களா?

இப்பவும் இ- - பட்டா விவகாரத்தில் மெகா ஊழல் நடப்பதாக சொல்றாங்களே. இந்த நியாயத்தை இவர் தான் கேட்கணுமுன்னு இவருக்கு ஓட்டு போட்ட ஜனங்க பேசுறாங்க. 'ரெஸ்ட் எடுத்தது போதும், புலியே வெளியே வா'ன்னு சிலர் உசுப்பேத்த துவங்கி இருக்காங்க.

இதை கேட்பது யாரு?

கோல்டு சிட்டி --- சிலிகான் சிட்டி வரை இயங்கும் ரயில்களில் 16 பெட்டிகள் இருந்ததை 12 ஆக குறைத்து, அதையே நிரந்தரமா ஆக்கிட்டாங்களே. இடநெருக்கடியில் அல்லல் படுவதே பயணியரின் அன்றாட வேலையா போச்சு. அதில் பயணிக்கிற பயணியரில் நோயாளிகள், முதியோர், குழந்தைகள் மூச்சு திணறுறாங்களே. இதை 'ஏசி' கார்களில் பவனி வருகிற மக்கள் தலைவர்கள் உணரலயே.

பழையபடி 16 பெட்டிகளாக இயக்க செய்வாங்களா. பயணியர் ஆலோசனைக் குழு என நியமன உறுப்பினர்கள் சிலரை ம.அரசு நியமித்தது எதுக்காக?

Advertisement