லேப் டெக்னீசியன் நேரடி நியமன எழுத்து தேர்வு வேண்டும் சங்க பொது செயலாளர் பேட்டி
சிவகங்கை: ''அரசு மருத்துவமனைகளில் லேப் டெக்னீசியன் 2 ம் நிலை நேரடி நியமனத்திற்கான எழுத்து தேர்வினை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்,'' என, சிவகங்கையில் அரசு லேப் டெக்னீசியன் சங்க மாநில பொது செயலாளர் ஷாஜஹான் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: அரசு மருத்துவமனைகளில் தலைமை லேப் டெக்னீசியன் அலுவலர் பணியிடங்களை உருவாக்கி நிரப்பிட வேண்டும். ரத்த வங்கி மற்றும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள், தேனி மற்றும் வேலுார் மருத்துவ கல்லுாரிகளில் காலமுறை ஊதியத்தில் லேப்டெக்னீசியன் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்.
அரசாணை 262ஐ ரத்து செய்ய வேண்டும். லேப் டெக்னீசியன் 2 ம் நிலை நேரடி நியமனத்திற்கான எழுத்து தேர்வினை அமல்படுத்த வேண்டும். அனைத்து காலிபணியிடங்களையும் காலமுறை சம்பளத்தில் நியமிக்க அரசு முன்வர வேண்டும். லேப் டெக்னீசியன்களுக்கென கவுன்சிலையும் உருவாக்க வேண்டும் என்றார்.
மேலும்
-
கனடா இந்தியர்கள் ரத யாத்திரையில் முட்டை வீசி தாக்குதல்: இனவெறி கும்பல் அட்டூழியம்
-
நடிகை சரோஜாதேவி மறைவு : முதல்வர், இபிஎஸ், ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல்
-
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 4 பேர் தமிழக அரசின் செய்தி தொடர்பாளராக நியமனம்
-
போதைப்பொருள் விற்பனை விவகாரம்; மல்லிகார்ஜூன கார்கே மகனுக்கு நெருக்கமானவர் கைது
-
வெள்ளி விழா படங்களில் முத்திரை பதித்த சரோஜா தேவி : வரிசை கட்டிய விருதுகள்
-
தமிழகத்தில் நடப்பது தம்பிகளின் ஆட்சி: எல்.முருகன் குற்றச்சாட்டு