கனடா இந்தியர்கள் ரத யாத்திரையில் முட்டை வீசி தாக்குதல்: இனவெறி கும்பல் அட்டூழியம்

டொரோன்டோ: கனடாவில் இந்தியர்கள் நடத்திய ரத யாத்திரையின் போது, மர்ம நபர்கள் முட்டைகளை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டொரோன்டோ நகரில் இந்தியர்களின் ரத யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தி பாடல்களை பாடியபடியும், கடவுளின் பெயரைச் சொல்லி கோஷமிட்டபடி இந்தியர்கள் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் மீது சிலர் முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியது. அந்த வீடியோவில் சாலையின் ஓரத்தில் இருந்த கட்டடங்களில் இருந்து முட்டைகளை, யாத்திரை சென்ற இந்தியர்கள் மீது வீசுவது தெரிய வந்தது. இது இனவெறி தாக்குதல் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் கூறும்போது, "முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தும் போது அதிர்ந்து போய் விட்டோம். எங்களின் ரத யாத்திரையை நிறுத்த வேண்டும் என்று நோக்கத்தில் இந்த செயலை செய்தனர். ஆனால், அவர்களின் எண்ணம் தோல்வியடைந்து விட்டது. வெறுப்பு ஒருபோதும் வெல்ல முடியாது," என்றனர்.







மேலும்
-
ஸ்டன்ட் காட்சியில் அஜாக்கிரதையால் ஒருவர் உயிரிழப்பு: இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு
-
தந்தையின் கட்சிப் பதவிக்கு வேட்டு வைத்த தனயன்: ராஜ்யசபா எம்.பி., கல்யாணசுந்தரம் அப்செட்
-
அப்பா பேச்சை கேட்காத மகன் என்று யாரும் சொல்லி விடக்கூடாது: அறிவுரை சொல்கிறார் உதயநிதி
-
துரோகி என்ற வார்த்தையை ஜீரணிக்க முடியவில்லை: கண்ணீர் விட்டு கதறிய மல்லை சத்யா
-
விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்டது சுபான்ஷூ சுக்லா குழு; நாளை மதியம் பூமிக்கு வந்தடைவர்!
-
சுவர் ஏறி குதித்த முதல்வர் உமர் அப்துல்லா: அஞ்சலி நிகழ்ச்சியில் பரபரப்பு