நாட்டின் 2வது மிக நீளமான கேபிள் பாலம்: கர்நாடகாவில் திறந்து வைத்தார் நிதின் கட்கரி

3

பெங்களூரு: கர்நாடகாவின் சிவமோகாவில் உள்ள கலசவல்லி மற்றும் அம்பர்கொண்ட்லு நகரங்களை இணைக்கும் இந்தியாவின் 2வது மிக நீளமான கேபிள் பாலத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று திறந்து வைத்தார்.

சாகர் மற்றும் மரகுடிகா இடையே ஷராவதி நதியின் மீது இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 369ல் வரும் இந்த பாலம் 6 கி.மீ., நீளம் கொண்டதாகும். ரூ.473 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. புனித யாத்திரை மையமான சிகந்தூர் சவுடேஸ்வரி கோவிலுக்கும் இந்தப் பாலம் ஒரு முக்கியமான இணைப்புப் பாதையாகும்.

நீளமான கேபிள் பாலத்தை திறப்பதற்கு அமைச்சர் நிதின் கட்கரி, சிவமோகா விமான நிலையத்திலிருந்து சாகரில் உள்ள மான்கலே ஹெலிபேடிற்கு வந்து, அங்கிருந்து சாலை வழியாக பாலத்தை அடைந்தார். அதை தொடர்ந்து பாலத்தை கேபிள் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா புறக்கணித்ததால் காங்கிரஸ் நிகழ்ச்சியைத் தவிர்த்தது.

Advertisement