குளத்தில் விழுந்த நாய் மீட்பு

பள்ளிக்கரணை, வறண்டு போன, 20 அடி குளத்தில் தவறி விழுந்த நாயை, தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்.

பெருங்குடி மண்டலம், வரதராஜபுரத்தில், மாநகராட்சிக்கு சொந்தமான குளம் உள்ளது. 20 அடி வரை ஆழம் கொண்ட குளத்தை சுற்றி, இரும்பு கம்பி தடுப்பு அமைத்திருந்தாலும், குளத்தின் உள்ளே இருந்து வெளியே வர படிக்கட்டு வசதி செய்யப்படவில்லை.

இதனால், ஆடு, நாய்கள், சிறார்கள் அடிக்கடி தவறி விழுந்து விடுவர். அவர்களை, மேடவாக்கம் தீயணைப்பு வீரர்கள் மீட்பது வாடிக்கை. இந்நிலையில், நேற்று நாய் ஒன்று விழுந்து, பல மணி நேரம் வெளி வரமுடியாமல் தவித்தது.

பொதுமக்கள் புகாரின்படி, மேடவாக்கம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, நீண்ட போராட்டத்திற்கு பின் நாயை மீட்டனர்.

மழைக்காலம் நெருங்கும் நிலையில், அந்த குளத்தில் மழைநீர் சேகரமாக வழிசெய்ய வேண்டும். அதே நேரம் குளத்தில் இருந்து வெளியேற படி வசதி ஏற்படுத்த வேண்டும் என, சுற்று வட்டாரப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement