ஐகோர்ட் வளாகத்தில் காமதேனு சிறப்பங்காடி 

சென்னை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், டி.யு.சி.எஸ்., எனப்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் சார்பில், காமதேனு கூட்டுறவு சிறப்பு அங்காடி அமைக்கப்பட்டு உள்ளது. இதை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.டி. ஆஷா நேற்று துவக்கி வைத்தார்.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதிகள் சுப்ரமணியன், சுரேஷ்குமார், மாலா ஆகியோர் அங்காடியை பார்வையிட்டனர்.

இந்த அங்காடியில் கூட்டுறவு தயாரிப்புகள், மளிகை பொருட்கள் உள்ளிட்டவை, 5 சதவீதம் முதல், 50 சதவீதம் வரை தள்ளுபடியில் விற்கப்படுகின்றன.

அங்காடிக்கு அருகில் பண்ணை பசுமை காய்கறி கடையில் காய்கறிகளும் விற்கப்படுகின்றன. மேலும், நீதிமன்ற வளாகத்தில் ஊழியர்களுக்கான கூட்டுறவு, 'கேன்டீன்'னும் துவக்கப்பட்டுள்ளது.

Advertisement