பொது மேடையில் ஸ்டாலினுடன் விவாதத்திற்கு தயார்: பழனிசாமி பேச்சு

விருத்தாசலம்: முதல்வருக்கு தைரியம் இருந்தால் மக்கள் முன் பொதுமேடையில், தி.மு.க., அரசின் சாதனை குறித்து என்னுடன் விவாதிக்க வேண்டும் என, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பேசினார்.
விருத்தாசலத்தில் அ.தி.மு.க., சார்பில் நடந்த 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் பிரசார கூட்டத்தில் அவர் பேசியது:
தி.மு.க., அரசு விளம்பர மாடல் அரசு. கடன் வாங்கி மகளிர் உரிமை தொகை கொடுப்பதுதான் தி.மு.க.., அரசின் சாதனை. குப்பைக்கு வரி போட்டது தி.மு.க., அரசு. எனது வீட்டிற்கு ரூ.5 ஆயிரம் தான் மின் கட்டணம் இருந்தது. தற்போது, தி.மு.க., ஆட்சியில், ரூ.14 ஆயிரம் மின் கட்டணம் கட்டுகிறேன்.
ஊழலில் தான் தி.மு.க., சாதனை படைத்துள்ளது. முதல்வருக்கு தைரியம் இருந்தால் மக்கள் முன் பொதுமேடையில், தி.மு.க., அரசின் சாதனை குறித்து என்னுடன் விவாதிக்க தயாரா. தி.மு.க., கட்சி என்ன அரச பரம்பரையா. அண்ணன் துரைமுருகன் மிசா சட்டத்தில் கைதாகினார். கட்சிக்காக உழைத்தவருக்கு பதவி வழங்காமல், முதல்வர் ஸ்டாலின் மகன் என்ற ஒன்றை காரணத்தால், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
உழைப்பவர்களுக்கு அ.தி.மு.க.,வில் அங்கீகாரம் கிடைக்கும். ஆட்சி அதிகாரத்திற்காக தி.மு.க., எதை வேண்டுமானாலும் அடமானம் வைக்கும்.
அமலாக்கதுறை இப்போதுதான் ஒவ்வொரு அமைச்சர் விட்டு கதவுகளையும் தட்ட ஆரம்பித்துள்ளது. எத்தனை அமைச்சர்கள் தேர்தல் நேரத்தில் எங்கு இருப்பார்கள் என்று தெரியாது. முதல்வர் ஸ்டாலின், கருணாநிதியின் அடையாளத்தால் முதல்வர் ஆகியுள்ளார். ஆனால் நான் கிளை கழக பொறுப்பில் இருந்து முதல்வர் பொறுப்பிற்கு உயர்ந்தவன். முதல்வர் ஸ்டாலின், எட்டப்பனை வைத்து அ.தி.மு.க., கட்சியை முடக்க பார்த்தார். ஆனால் அது நடக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும்
-
ஆசிரியர்களை கைது செய்வதா: தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்
-
லஞ்ச பேரம் ஆடியோ கசிவு: நேபாள அமைச்சர் ராஜினாமா
-
பூமிக்கு திரும்பினார் சாதனை நாயகன் சுபான்ஷூ சுக்லா
-
ஈஷாவில் சத்குரு முன்னிலையில் கொண்டாடப்பட்ட குரு பௌர்ணமி விழா
-
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு பொய்களுடன் ஸ்டாலின் என பெயர் வையுங்க: அ.தி.மு.க. ஜெயக்குமார் காட்டம்
-
வி.சி.க., ஓட்டு சிந்தாமல் சிதறாமல் தி.மு.க., கூட்டணிக்கு விழும்: திருமாவளவன் நம்பிக்கை