வி.சி.க., ஓட்டு சிந்தாமல் சிதறாமல் தி.மு.க., கூட்டணிக்கு விழும்: திருமாவளவன் நம்பிக்கை

சிதம்பரம்: ''வி.சிக ஓட்டுகள் சிந்தாமல் சிதறாமல், தி.மு.க., கூட்டணிக்கு கொத்துக் கொத்தாக விழும்” என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் இளையபெருமாள் நூற்றாண்டு அரங்கம் திறப்பு விழாவில், முதல்வர் ஸ்டாலின், வி.சி.க., தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் திருமாவளவன் பேசியதாவது: திராவிட மாடல் என்று சொல்லக்கூடிய இந்த அரசு மறுபடியும் மலரக்கூடிய அணியாக அமையும். அதற்கு விடுதலை சிறுத்தை கட்சி உற்ற துணையாக தமிழகம் தழுவிய அளவில் இருக்கும். தி.மு.க.,விற்கு விழும் 4 ஓட்டுகளில் ஒரு வாக்கு விடுதலை சிறுத்தை கட்சி ஓட்டாக இருக்கும்.
25 ஓட்டுகள்
100 ஓட்டுகளில் 25 ஓட்டுகள் விடுதலை சிறுத்தை கட்சியின் ஓட்டுகளாக இருக்கும். ஒரு ஓட்டு கூட சிந்தாமல் சிதறாமல், தி.மு.க., தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு கொத்து கொத்தாக விழும் என்கிற அளவிற்கு நாங்கள் களப்பணி ஆற்றுவோம். கைகோர்த்து நிற்கிறோம். களத்தில் நிற்கிறோம் என்பதற்கு இதுதான் முதன்மை காரணம்.
மக்களின் நலன்களில் அக்கறை செலுத்துகிற அரசாக மக்களை வீடு தேடி சந்திக்கிற ஒரு அரசாக, அவர்களின் குறைகளை கேட்டு 45 நாட்களில் தீர்வு காண்போம் என்று உறுதி அளிக்கிற ஒரு அரசாக, தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீதத்திற்கு மேல் நிறைவேற்றி காட்டி இருக்கிற அரசாக, தி.மு.க., அரசு விளங்குகிறது.
தோழமைக் கட்சிகள்
அதிலும் நமது முதல்வர் மிகச்சிறந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். தாய் எட்டு அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பார்கள். கருணாநிதியை விட, முதல்வர் ஸ்டாலின் சொல்லக்கூடிய வகையில் இன்றைக்கு தோழமைக் கட்சிகளை எல்லாம் வெற்றிகரமாக ஒன்றிணைத்து வழி நடத்தி வருகிறார். கருணாநிதியை விட என்று சொன்னால் அவரை குறைத்து மதிப்பிடுவது அல்ல. அவரால் உருவாக்கப் பெற்ற முதல்வர் எவ்வளவு வலிமையோடு இருக்கிறார், ஆற்றல் மிக்கவராக இருக்கிறார்.
தி.மு.க., ஆட்சி
நிர்வாகத்திலும் கெட்டிக்காரராக இருக்கிறார் என்பதற்கு இவையெல்லாம் சான்று. பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி முன்மாதிரியாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் முதல்வருக்கு என்றைக்கும் நாம் உற்ற துணையாக இருப்போம். மீண்டும் தி.மு.க., ஆட்சியே தமிழகத்தில் அமையும்.
@quote@
திராவிட மாடல் அரசு அமையும். அவர் இன்னும் என்னென்ன நல்ல திட்டங்களை எல்லாம் மனதில் வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் எப்படிப்பட்ட ஆட்சி நிர்வாகம் நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதற்கு ஒரே ஒரு சான்று சொல்கிறேன்.quote
இளையபெருமான் சிலை இன்னும் அழகாக வரவேண்டும் மாற்றி அமையுங்கள் என பொதுப்பணித்துறை அமைச்சருக்கு முதல்வருக்கு உத்தரவிட்டார்.
ஓரணியில் தமிழகம்
தொலைநோக்கு பார்வை கொண்ட முதல்வருக்கு நாம் உற்ற துணையாக இருக்கிறோம். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், ஓரணியில் தமிழகம். அதுதான் தி.மு.க., அணியில் தமிழகம். மற்றவர்கள் எல்லாம் கட்சிகளாக இருப்பார்கள். ஆனால் இந்த அணி ஒட்டுமொத்த மக்களும் திரளுகிற ஒரு அணியாக, தி.மு.க., தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியாக, திராவிட மாடல் என்று சொல்லக்கூடிய இந்த அரசு மறுபடியும் மலரக்கூடிய ஒரு அணியாக அமையும். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.











மேலும்
-
இன்னும் எத்தனை தடை விதித்தாலும் சமாளிப்போம்: டிரம்ப் மிரட்டலுக்கு ரஷ்யா பதில்
-
போட்டிக்கு வந்தது டெஸ்லா: நல்வரவு என்கிறார் ஆனந்த் மஹிந்திரா
-
குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம்: முதல்வருக்கு அண்ணாமலை வலியுறுத்தல்
-
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தணும்: சீமான்
-
கல்லுாரி மாணவிக்கு பாலியல் மிரட்டல்: பெங்களூருவில் இரு விரிவுரையாளர்கள் உள்ளிட்ட 3 பேர் கைது
-
210 தொகுதிகளில் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்: இபிஎஸ்