மின்விளக்கு கம்பம் மாயம்: மின்வாரியம் பாராமுகம்

பொன்னேரி ரயில் நிலையத்தில் இருந்து, வேண்பாக்கம் செல்லும் சாலையில் மின்விளக்குகள் பழுதாகி உள்ளன.

செடி, கொடிகளில் மின்விளக்கு கம்பங்கள் மறைந்து வருகின்றன. இரவு நேரங்களில் இச்சாலையில் மின்விளக்கு வசதியில்லாமல் பயணியர் தவிக்கின்றனர்.

இதன் காரணமாக, பெண்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே, கம்பங்களை சீரமைத்து, மின்விளக்குகள் பொருத்த, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எம்.குணசேகரன், பொன்னேரி.

Advertisement