பாதுகாப்பாக பயணம்; இறைவனுக்கு நன்றி: சுபான்ஷு சுக்லாவின் தாயார் நெகிழ்ச்சி

2

லக்னோ: ஆக்சியம்-4 விண்வெளிப் பயணத்தின் குழுவினர் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியதை அடுத்து, இறைவனுக்கு நன்றி என்று இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவின் தாயார் ஆஷா சுக்லா நெகிழ்ச்சியுடன் கூறினார்.


சர்வதேச விண்வெளி பயணத்தை முடித்துக் கொண்ட இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 பேர் பயணித்த டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக கடலில் தரையிறங்கியது. சுபான்ஷூ சுக்லா பூமிக்கு திரும்பும் நிகழ்வை, லக்னோவில் உள்ள சிட்டி மான்டெசரி பள்ளியில் நேரலையில் அவரது குடும்பத்தினர் பார்த்தனர். அப்போது குடும்பத்தினர் ஆனந்த கண்ணீர் வடித்தனர். தொடர்ந்து கேக் வெட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து சுபான்ஷு சுக்லாவின் தாயார் ஆஷா சுக்லா அளித்த பேட்டி:

என் மகன் பாதுகாப்பாக திரும்பியுள்ளார். இறைவனுக்கு நன்றி. இந்த நிகழ்வை வெளியில் நின்று, தகவல்களை பகிர்ந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் நன்றி. நான் உணர்ச்சிவசப்பட்டேன்.எப்படியிருந்தாலும், என் மகன் பல நாட்களுக்குப் பிறகு திரும்பியுள்ளார்.

இவ்வாறு ஆஷா சுக்லா கூறினார்.

பூமிக்கு விண்கலம் திரும்பியதும், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டனர்.

Advertisement