குரங்குகள் தொல்லை: ஊத்துக்கோட்டையில் அச்சம்

ஊத்துக்கோட்டை காவல் நிலையம் பின்புறம் உள்ள சாலைகள் மற்றும் திருவள்ளூர் சாலை ஆகியவற்றில் குரங்குகள் அதிகளவில் உள்ளன. சாலையில் பொருட்கள் வாங்கிக் கொண்டு செல்லும் மக்கள், குரங்குகளால் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

மேலும், வீடுகளில் குரங்குகள் புகுந்து விடுவதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குரங்குகளை பிடித்து காட்டில் விட வேண்டும்.

- என்.பிரகாஷ், ஊத்துக்கோட்டை.

Advertisement