ரயில்வே உயர்மட்ட பாலத்தில் விளக்குகள் பொருத்தப்படுமா?

திருத்தணி நகரத்தில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக, சென்னை - திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில், பட்டாபிராமபுரம் பகுதியில் இருந்து திருத்தணி - அரக்கோணம் புறவழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இதில், எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில், ரயில்வே தண்டவாளத்திற்கு மேல் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாக, 24 மணி நேரமும் அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. சிலர் நடந்தும் செல்கின்றனர்.

இந்நிலையில், உயர்மட்ட பாலத்தின் மீது மின்விளக்குகள் அமைக்காததால், அதிகளவில் விபத்துகள் நடந்து வருகின்றன. எனவே, கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- அ.முனுசாமி, திருத்தணி.

Advertisement