கால்வாயில் குப்பை அடைப்பு: கழிவுநீர் வெளியேறி பாதிப்பு


பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது நன்மங்கலம். இங்கு அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்வாய்களில், வீடுகளின் கழிவுநீர் விடப்படுகிறது.

இப்பகுதியில் அமைந்துள்ள சுமதி நகர் ரெசிடென்சி 1வது தெருவில் உள்ள கால்வாயில் பகுதி மக்கள் குப்பையை வீசிச் செல்வதால், அதில் அடைப்பு ஏற்பட்டு, பல நாட்களாக அகற்றப்படாமல் உள்ளது.

இதனால், கழிவுநீர் செல்ல வழியின்றி, கால்வாயிலிருந்து வெளியேறி தெருவில் தேங்கி உள்ளதால், கொசுத் தொல்லை, துர்நாற்றத்தால் பகுதி மக்கள் அவதியடைவதோடு, பாதசாரிகளுக்கு தொற்றுநோய் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம், இதனை சீர்செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement