திருவான்மியூரில் தெருநாய் அதிகரிப்பு: கண்டுகொள்ளாத சுகாதார துறை

திருவான்மியூர் சீவார்டு சாலை, 2, 3, 4வது தெருக்கள் மற்றும் கடற்கரை சாலைகளில், தெரு நாய்கள் அதிகமாக உள்ளன. அவை, நடைபயிற்சி செல்லும் வயதானோர், பள்ளி செல்லும் குழந்தைகளை துரத்திக் கடிக்கின்றன. தினமும் இரண்டு, மூன்று பேராவது நாய்க்கடியால் பாதிக்கப்படுகின்றனர்.

சமீபத்தில், நடைபயிற்சி செய்த ஒரு கர்ப்பிணியை தெருநாய் துரத்தி, அப்பெண் கீழே விழுந்து காயமடைந்தார். சுகாதார துறையிடம் கூறினால், நடவடிக்கை இல்லை. வெறிபிடித்து பல நாய்கள் அலைகின்றன. இதை கட்டுப்படுத்த, மாநகராட்சி தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement